உள்நாட்டு செய்தி
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நுவரெலியா மாவட்டத்திற்கான மத்திய நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது
இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நுவரெலியா மாவட்டத்திற்கான மத்திய நிலையம் எதிர்வரும் 07 ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.
தொழிலாளர் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தலைமையில் இதற்கான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 18 ஆம் திகதி சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தையொட்டி நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது அப்பகுதி சிறார்களினால் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமை, இந்த நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நுவரெலியா மாவட்ட செயலகத்தின் 05 ஆம் மாடியில் இந்த மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வௌிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக பணியகத்தின் பதிவுகளை பெற்றுக்கொள்ளல், வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைத்தல், பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து சேவைகளையும் வழங்கல் என்பன இந்த புதிய மத்திய நிலையத்தினூடாக முன்னெடுக்கப்படவுள்ளன.