உள்நாட்டு செய்தி
காலி சிறைச்சாலை கைதிகள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதி
காலி சிறைச்சாலை கைதிகள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தற்போது காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
காய்ச்சலுடன் அடையாளங்காணப்பட்ட ஐவரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் காலி சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு மூளைக்காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே, மாத்தறை சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரு கைதிகள் உயிரிழந்தனர்.
தற்போது அங்கு நிலைமை சீராக உள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.