உள்நாட்டு செய்தி
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி 23.2 சதவீத அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவானதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.விபத்தில் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் விபரம்நவம்பர் மாத கையிருப்புஇதேவேளை கடந்த நவம்பர் மாதம் இந்நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 3.57 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்துள்ளது. இதில், சீனா வழங்கிய 1.4 பில்லியன் நிதி வசதியும் இதில் அடங்குவதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.