உள்நாட்டு செய்தி
ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ கொடுப்பனவு 100% ஆக அதிகரிப்பு
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் மருத்துவ உதவிக்காக வழங்கப்படும் நிதியுதவியை 100% அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஜனவரி 1ம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் குறிப்பிடப்படாத சில நோய்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாதாந்த வருமானம் 2 இலட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்கள் ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக மாதாந்த மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.