உள்நாட்டு செய்தி
காலி சிறைச்சாலையிலும் ஒரு கைதி உயிரிழப்பு..!
காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி நேற்று உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த கைதி கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கைதி சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த கைதி கொட்டவாகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவர் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் மாத்தறை சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.