உள்நாட்டு செய்தி
கஹவத்தை வயோதிப பெண் கொலை: மகள் விடுதலை
கஹவத்தையில் 71 வயதுடைய தாயாரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மகளை விடுதலை செய்யுமாறு பாலமடுல்ல நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
தாயின் கொலையுடன் மகளுக்கு தொடர்பில்லை என விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்ததை அடுத்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேக நபரை எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர் பாதிக்கப்பட்ட நபருக்கு தெரிந்தவர் எனவும், உயிரிழந்தவரின் வீட்டை திருத்துவதற்காக வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவரின் தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் மீது சந்தேகம் எழுந்ததன் காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என விசாரணைகளில் மேலும் தெரிய வந்துள்ளது.