உள்நாட்டு செய்தி
கொரோனா காரணமாக பெண் ஒருவர் உயிரிழப்பு…!
கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று (29) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதவாச்சியைச் சேர்ந்த 54 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுவாசக் கோளாறு காரணமாக மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்,
மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.