உள்நாட்டு செய்தி
ஆமர் வீதி வர்த்தக நிலையத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் !
கொழும்பு ஆமர் வீதி பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஆமர் வீதி பகுதியிலுள்ள கூட்டுறவு மருத்துவமனைக்கு அருகில் உள்ள கட்டிடமொன்றிலேயே தீப்பரவல் ஏற்பட்டது.
தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் தீப்பரவலில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.