உள்நாட்டு செய்தி
இறக்காமம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட, பகுதியில் சடலம் ஒன்று மீட்பு.!
இறக்காமம் – வாங்காமம் பகுதியில் இன்று காலை ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இச்சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலை ஒன்றினை முடித்த பின்னர் அதற்கான கூலி கொடுப்பதில் ஏற்பட்ட குளறுபடியே இக்கொலைக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
சடலம் வாங்காமம் பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றினுள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இன்னும் நிறைவு பெற வேலையில்,
சடலத்தை பார்வையிட அம்பாறை நீதிமன்ற கௌரவ நீதவான் வருகை தர உள்ளமை குறிப்பிடத்தக்கது.