உள்நாட்டு செய்தி
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் !
பண்டிகைக் காலங்களில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் 50 சதவீத எரிபொருள் கையிருப்பை பேனுமாறு இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக அறிவுறுத்தியுள்ளார்.
லங்கா ஐஓசி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சினோபெக் ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பண்டிகைக் காலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், எரிபொருள் விநியோகம் செய்யுமாறும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.