உள்நாட்டு செய்தி
இன்று முதல் நாடு முழுவதும் விசேட நடவடிக்கை
போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பணிப்புரைக்கு அமைய, இன்று அதிகாலை முதல் இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்று முதல் எதிர்வரும், 7 நாட்களுக்கு தொடர்ச்சியாக குறித்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதற்காக நாடளாவிய ரீதியில் காவல்துறை, விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சுற்றிவளைப்புகளின் மேலதிக கண்காணிப்புகளுக்காக, 9 பிரதி காவல்துறை மா அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.