உள்நாட்டு செய்தி
மின் விநியோகம் தடைப்பட்டதால் இரண்டு MRI இயந்திரங்கள் செயலிழப்பு
மின் விநியோகம் தடைப்பட்டதால் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரண்டு MRI இயந்திரங்கள் செயலிழப்பு
கடந்த சனிக்கிழமை (09) மின் விநியோகம் திடீரென தடைப்பட்டதால், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரண்டு MRI இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக நிறைவுகாண் மருத்துவ ஊழியர்களின் கூட்டு ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அதன் செயலாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தற்போது இரண்டு MRI இயந்திரங்கள் மாத்திரமே செயற்பாட்டு நிலையிலுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
”அந்த இயந்திரங்களை திருத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக” என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.