உள்நாட்டு செய்தி
திருத்தப் பணிகளுக்காக மூடப்படவுள்ள வடக்கு தொடருந்து பாதை!
மாஹோ சந்தி முதல் அநுராதபுரம் வரையான வடக்கு தொடருந்து பாதை திருத்தப் பணிகளுக்காக 6 மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி முதல் எதிர்வரும் 6 மாதங்களுக்கு குறித்த தொடருந்து மார்க்கம் மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தர்ப்பங்களில், கொழும்பிலிருந்து மாஹோ சந்தி வரையிலும், அநுராதப்புரத்திலிருந்து காங்கேசன்துறை வரையில், மாத்திரமே தொடருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு தொடருந்து மார்க்கத்தில் மாஹோ மற்றும் ஓமந்தை வரையில் இரண்டாம் கட்ட திருத்தப்பணிகளுக்காக இவ்வாறு மூடப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.