உள்நாட்டு செய்தி
துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்.
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொட கட்டண பரிமாற்று நிலையத்திற்கருகே உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது கடமை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சப்-இன்ஸ்பெக்டர் ருவன் குமார (54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
காலை 5 மணியளவில் தனது கடமைகளை முடித்துக் கொண்டு பேலியகொட பரிமாற்று நிலையத்திற்கு வந்த போதே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.