உள்நாட்டு செய்தி
தேர்வில் எதிர்பார்த்த பெறுபேறு வரவில்லை – மாணவி தற்கொலை
அண்மையில் வெளியான க. பொ. த சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாத யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் நேற்று (05) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது
பரீட்சை முடிவுகள் வெளியான பிறகு, எதிர்பார்த்தபடி முடிவுகள் வரவில்லை என்று பெற்றோர்கள் திட்டியதால் மனமுடைந்த மாணவி வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் விசாரணையில் தெரி ய வந்துள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் இறுதிக் கிரியைகளுக்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.