உள்நாட்டு செய்தி
கொழும்பில் இருந்து மும்பைக்கு விசேட விமான சேவை
கொழும்பிலிருந்து மும்பைக்கு விசேட விமான போக்குவரத்து சேவையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேவையின் மூலம் கொழும்பு மற்றும் மும்பைக்கு இடையில் பயணிப்போரின் எண்ணிக்கை 50 வீதமாக அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதன் மூலம் மும்பையிலிருந்து வரும் பயணிகளுக்கு கொழும்பினூடாக சிங்கப்பூர்,பெங்கொக், லண்டன், சிட்னி, பாரிஸ், மெல்பன் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு பயணிக்க கூடியதாய் இருக்குமென ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்போது இந்தியாவின் புதுடெல்லி, பெங்களூர், ஹைதராபாத், கொச்சி, மதுரை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு 100க்கும் மேற்பட்ட விமான சேவைகளை இயக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.