Connect with us

Uncategorized

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்

Published

on

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று (16) ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 4 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இன்று முதல் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் பயிற்சி பாடசாலையில் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.

அதன்பிரகாரம் சிறைச்சாலை அதிகாரிகள் 5,100 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.

இதனிடையே அஸ்ட்ரா செனக்கா கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு வழங்கும் திட்டம் ஜனாதிபதியின் ஆலோசணையின் பிரகாரம் நேற்று (15) ஆரம்பிக்கப்பட்டது.

மேல் மாகாணத்தில் அபாயம் வலயங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.