உள்நாட்டு செய்தி
கொழும்பில் பாரிய போராட்டம்: விற்கப்படும் அரச வங்கிகள் – ஒன்றுதிரண்ட வங்கி ஊழியர்கள்
அரசின் கடன்களை அடைப்பதற்காக நாட்டு மக்களின் வங்கிகளை விற்பனை செய்வதற்கு அனுமதிக்க முடியாது என இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் உதவி செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை அரசின் நியாயமற்ற வரிக்கொள்கைகளால் வங்கி ஊழியர்கள் பாரிய அளவில் பாதிக்கப்படுவதாக ஊழியர் சங்கத்தின் உதவி செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (2.12.2023) கொழும்பு – விகாரமாதேவி பூங்காவில் வங்கி ஊழியர்களால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்றுள்ளது.
மேலும் அரசாங்கம் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க விட்டால் நாடு முழுவதும் சென்று போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.