உள்நாட்டு செய்தி
கோட்டாபயவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ள ரிஷாட்!
தம்மை அநியாயமாக கைது செய்து தடுத்து வைத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அரச அதிகாரிகள் பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய எம்.பி பதியுதீன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயங்கரவாத விசாரணைப் பிரிவின் (TID) பணிப்பாளருடன் இணைந்து தமது அரசியல் இலாபங்களுக்காக தம்மைக் கைது செய்து 5 வருடங்கள் சிறையில் வைத்திருக்க உத்தேசித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.