உள்நாட்டு செய்தி
போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!
மஹியங்கனையில் 5,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது அவர் கைதாகியுள்ளார்
கைதானவர் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 5,000 ரூபாய் பெறுமதியான எட்டு போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.