உள்நாட்டு செய்தி
நீராடச் சென்ற இளைஞர் பலி
திருகோணமலை – சம்பூர், தொடுவான்குளம் குளத்தில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
குறித்த இளைஞர் நேற்று (29) பிற்பகல் குளத்தில் நீராடச் சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞனை பிரதேசவாசிகள் முதலையிடம் இருந்து மீட்டுள்ள போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தோப்பூர் – பாட்டாளிபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.