உள்நாட்டு செய்தி
களுத்துறையில் 100 ரூபாவுக்காக சிறுமிக்கு நேர்ந்த துயரம்
தென்னிலங்கையில் 100 ரூபாவுக்காக சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை இங்கிரிய பிரதேசத்தில் 67 வயதான முதியவர் இந்த மோசமான செயலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
100 ரூபாய் தருவதாகக் கூறி 11 வயது சிறுமியை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்தமை தெரிய வந்துள்ளது.
அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.