உள்நாட்டு செய்தி
முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் இன்று(22) இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக பதிவுகளின்றி இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்குளாய் கிழக்கு பகுதியிலுள்ள சந்தேக நபர் வீட்டிற்கு சென்ற பொலிஸார் சோதனை செய்த போது பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததன் பேரிலே 32 வயதுடையவர் இடியன் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.