உள்நாட்டு செய்தி
வெள்ளவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் இளைஞர் உயிரிழப்பு
நேற்றிரவு வெள்ளவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெள்ளவத்தை ருத்ரா மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து இளைஞர் தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அப்பகுதியில் வசிக்கும் 20 வயதுடையவர் எனவும், அவர் தனது பெற்றோருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனின் சடலம் அடுக்குமாடி குடியிருப்பின் பின் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்