உள்நாட்டு செய்தி
பேராதனை நகரில் மண்சரிவு ஏற்பட்டு,4 கடைகள் மீது விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு…!
கண்டி – கொழும்பு வீதியில் பேராதனை நகரில் நேற்று (21) இரவு மண்சரிவு ஏற்பட்டு 4 கடைகள் மீது விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவரது சடலத்தை தேடும் பணியில் பொலிஸாரும், அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் நேற்று இரவே ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் பேராதனை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இடத்தில் இதற்கு முன்னரும் மண்சரிவு ஏற்பட்டதால், கடைக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
ஆனால், அவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறாததால் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அப்பகுதியில் பாதிப்புக்குள்ளாகும் கடைகள் உள்ளதாகவும், அவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக,
அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.