உள்நாட்டு செய்தி
பாடசாலை மதில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி பலி.!
வெல்லம்பிட்டிய, வேரகொட பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 6 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
காயமடைந்த மாணவர்களில் ஒருவரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.