உள்நாட்டு செய்தி
சிவனொளிபாதமலைக்கு பொலித்தீன் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள்
டிசம்பர் போயா தினத்தில் ஆரம்பமாகும் சிவனொளிபாத யாத்திரைக் காலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கொண்டு செல்வதை கட்டுப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்தார்.ஒவ்வொரு யாத்திரை காலத்தின் முடிவிலும் நூற்றுக்கணக்கான தொன் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் ஸ்ரீ பாத மலை சுற்றுச்சூழலில் சேர்வதாகவும், நுவரெலியா மாவட்ட செயலகம் மஸ்கெலியா பிரதேச சபைக்கு வருடாந்தம் 2 மில்லியன் ரூபாவை பொலித்தீன் அகற்றுவதற்கு வழங்குவதாகவும் அவர் கூறினார்.சிவனொளிபாதமலை சுற்றுச்சூழலில் சேரும் அனைத்து பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க முடியாத காரணத்தினால், அதில் சில அளவு சுற்றுச்சூழலில் சேர்வதாகவும், அவை சிதைவடையாததால், சுற்றுச்சூழலும், அங்கு வாழும் விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் மாவட்ட செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.நல்லதண்ணி வீதியூடாக பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கொண்டு செல்வதை கட்டுப்படுத்தும் வகையில் இம்முறை பல சோதனைச் சாவடிகள் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.