உள்நாட்டு செய்தி
மோட்டார் சைக்கிள் விபத்து : 16 வயது மாணவி பலி !
மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயதான பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்த சம்பவம் மாவத்தகம பகுதியில் நேற்று(02) மாலை இடம்பெற்றுள்ளது.குறித்த மாணவி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ள நிலையில், மோட்டார் சைக்கிள் வீதியில் சறுக்கி எதிர்திசையில் வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்நிலையில் படுகாயமடைந்த மாணவியும் அவரது தந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.