உள்நாட்டு செய்தி
குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொலை செய்த கணவன்
குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காலி, பொத்துப்பிட்டிய ரம்புக்க பிரதேசத்தில் இன்று காலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.65 வயதான ஏ.வி.ஜி. பிரேமலதா என்ற பெண்ணே கொலை செய்யப்பட்ட நிலையில் கொலை செய்த கணவர் 60 வயதுடையவராகும். இவர்களுக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.
மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிப்புபெண்ணுடன் தொடர்புசந்தேகநபர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்துள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண் பல தடவைகள் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும், அவரை கணவனுடன் வாழ நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் இன்று இருவருக்குமிடையில் வாய்த்தகராறு ஏற்பட்டதையடுத்து மனைவியை கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.நாட்டில் இடம்பெற்று வரும் கப்பம் கோரல்கள் தொடர்பில் பொலிஸாரின் விசேட அறிவிப்புதப்பியோடிய நபர்கொலையை செய்த கணவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.