உள்நாட்டு செய்தி
போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன கைது
நேற்றிரவு வெள்ளவத்தை மரைன் ட்ரைவில் மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.ரவி செனவிரத்னவின் வாகனம் மற்றொரு காருடன் மோதியதோடு சுற்றுலாப் பேருந்து ஒன்றின் மீதும் மோதியுள்ளது.விபத்து நடந்தபோது முன்னாள் டிஐஜி குடிபோதையில் இருந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.