உள்நாட்டு செய்தி
நீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பரிதாப மரணம்
திருகோணமலை-எத்தாபெதந்திவெவ பகுதியில் நீர் தொட்டியில் விழுந்து சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்றிரவு (28) இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் விசாரணைஇவ்வாறு உயிரிழந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்த சனுக பாசன (14வயது) என தெரியவருகின்றது.தாய் உயிரிழந்துள்ளதாகவும் தந்தை பிள்ளைகளை விட்டுச்சென்று வேறு இடத்தில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சிறுவன் தனது மாமாவின் வீட்டில் வாழ்ந்து வந்த போது வேளாண்மை செய்வதற்காக நீர் தொட்டியில் நெல் போடப்பட்டிருந்ததாகவும் அதற்குள் இறங்கி விளையாடிக்கொண்டிருந்த போது விழுந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
பிரேத பரிசோதனைகுறித்த சிறுவனுக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருப்பதாகவும், தொட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது வலிப்பு நோய் ஏற்பட்டிருக்கலாம் எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.இருந்த போதிலும் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.