உள்நாட்டு செய்தி
தென் மாகாணத்தில் மீண்டும் பாடசாலைகள் திறப்பு…!
தென் மாகாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக பல கல்வி வலயங்களில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று (24) முதல் வழமை போன்று திறக்கப்பட்டுள்ளன.
இதன்படி தெனியாய கல்வி வலயத்தில் மூடப்பட்ட 77 பாடசாலைகளும் முலட்டியான மற்றும் அக்குரஸ்ஸ கல்வி வலயத்தில் மூடப்பட்ட 77 பாடசாலைகளும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.