Connect with us

உள்நாட்டு செய்தி

வேலை நாட்களைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டால் விளைவு பாரதூரமாகும் கம்பனிகளை எச்சரிக்கும் இ.தொ.கா

Published

on

வேலை நாட்களை குறைக்க கம்பனிகள் நடவடிக்கை எடுத்தால் விளைவுகள் பாரதூரமாக இருக்குமென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

சௌமியபவனில் இன்று (09) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கூறினார்.

“பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்றைய தினம் சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்றதுடன் இதில் 1000 ரூபா சம்பள உயர்வை வழங்கும் யோசனையும் நிறைவேற்றப்பட்டதாக நிர்ணயிக்கப்பட்டது.

வேலை நாட்கள் குறைக்கப்படாது. அப்படிச் செய்தால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்கப்பட மாட்டாது என்பதை உறுதியாக சொல்கிறோம். அரசாங்கமும் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

அதையும் மீறி வேலை நாட்களைக் குறைக்கும் நடவடிக்கையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஈடுபடுமாக இருந்தால், அதற்கு பதிலடி கொடுக்க இ.தொ.கா தயாராக இருக்கிறது. அந்தப் பதிலடி, ஆயிரம் ரூபாய் நாள் சம்பளத்தை வழங்குவதையும் விட மோசமான பாதிப்பைக் கம்பனிகளுக்கு ஏற்படுத்திவிடும்” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.