உள்நாட்டு செய்தி
பெரகல – வெள்ளவாய வீதியில் மண் சரிவு
கடும் மழை காரணமாக பெரகல – வெல்லவாய ஏ4 வீதிக்கு கீழே பிளாக்வுட் பகுதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இன்று (08) காலை 8.00 மணியளவில் குறித்த மண்மேடு வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியில் பாறைகள் மற்றும் மர கிளைகளுடன் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதியின் பகுதி நூறு அடிக்கு மேல் முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் மண்சரிவு அபாயம் உள்ளதால், வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.