Connect with us

உள்நாட்டு செய்தி

திடீர் ரயில் வேலைநிறுத்தம்

Published

on

காவலர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரின் கடமைகளை இடைநிறுத்துமாறு கோரி, சற்று நேரத்திற்கு முன்னர் திடீர் ரயில் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.மாளிகாவத்தை ரயில்நிலையத்தில் ஏற்பட்ட தகராறில் காவலாளி தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது .
இந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையால் மாளிகாவத்தை புகையிரத நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் புகையிரதங்கள் மாத்திரமே பாதிக்கப்படுகின்றன. இது தொடர்பாக ரயில்வே பொது மேலாளருடன் (ஜிஎம்ஆர்) ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது .