உள்நாட்டு செய்தி
ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதுண்டு விபத்து : ஒருவர் பலி
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் புகையிரதத்தில் முச்சக்கரவண்டியோன்று மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று முற்பகல் மட்டக்களப்பில் இருந்து மாகோ சந்தி புகையிரத நிலையத்தை நோக்கி சென்ற புகையிரதத்திலேயே முச்சக்கர வண்டி மோதுண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பத்தில் ஏறாவூர் பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய 03 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மோற்கொண்டு வருகின்றனர்.பாதுகாப்புக்கடமையில்லாத நிலையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.