உள்நாட்டு செய்தி
பெற்ற தாயினால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, 6 மாதக் குழந்தை உயிரிழப்பு…!
ஆறு மாதமும் 11 நாட்களுமான கைக்குழந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்டதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண் ஊருபொக்க கட்டுவன பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய தாய் ஆவார்.
கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி தாயார் தனது குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும்போது குழந்தையின் தலை சுவரில் பட்டதாகத் தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்த இந்தக் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இருப்பினும் வைத்தியசாலை விசாரணைகளில் இந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதனையடுத்து,
ஊருபொக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.
விசாரணைகளின் போது தாயினால் இக்குழந்தை கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து தாயை கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.