உள்நாட்டு செய்தி
பாதுகாப்பற்ற தொடருந்து கடவையினால் நேர்ந்த விபத்து: ஒருவர் பலி

கொடகம, கஹவ பகுதியில் பாதுகாப்பற்ற தொடருந்து குறுக்கு கடவையில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து இன்றையதினம் (28.09.2023) இடம்பெற்றுள்ளது.
பெலியத்தவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த அதிவேக தொடருந்து, கழிவுப் பொருட்களை ஏற்றிச்செல்லும் லொறியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.ஒருவர் படுகாயம்இந்த விபத்தில் உயிரிழந்த நபரின் சடலம் கஹவ தொடருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்தில் படுகாயமுற்ற மற்றொரு நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமேலும் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.