உள்நாட்டு செய்தி
மகிந்தவின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நலமுடன் இருப்பதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.மகிந்த சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் மகிந்த ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அமைச்சர் டி.வி.சானக்கவின் மாமனாரின் இறுதிச் சடங்கில் மகிந்த கலந்து கொள்ளவில்லை.
மகிந்தவின் உடல்நிலைஇந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சுகவீனம் காரணமாக கலந்து கொள்ளவில்லை என சமூகவலைத்தளங்களில் தகவல் பகிரப்பட்டுள்ளது.
வதந்திகளை பொய்யாக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று பாமன்கடை ஸ்ரீ மகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
பாமன்கடை ஸ்ரீ மகா விகாரையின் தலைவர் வல்பொல பியானந்த தேரரின் வேண்டுகோளுக்கு இணங்க மகிந்தவின் தலைமையில் மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.