உள்நாட்டு செய்தி
மனைவியின் கருப்பையை அகற்றிய வைத்தியசாலை: கணவன் பொலிஸில் முறைப்பாடு
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்று(26)குழந்தை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தனது மனைவிக்கு சத்திர சிகிச்சை மூலம் இறந்த நிலையில் குழந்தை எடுக்கப்பட்டதோடு, தனது மனைவியின் கருப்பையும் அகற்றப்பட்டுள்ளது.
இது மருத்துவ தவறுகளின் காரணமாக இடம்பெற்றது எனத் தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இராதுரை சுரேஸ் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
பதிவுமேலும்,தனது வாழ்க்கையில் இனி குழந்தை பாக்கியமே இல்லாத நிலைமைக்கு தனது குடும்பத்தை தள்ளிவிட்டார்கள் என்றும் தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மேற்படி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.