உள்நாட்டு செய்தி
சமூக வலைத்தளங்களில் பொய் செய்தியை பரப்பிய குற்றத்தில்,கடூழியச் சிறைத்தண்டனை
கோவிட் -19 தொற்றுநோய் பரவுவது தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் தவறான செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதனை அடுத்து கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ், குறிப்பிட்ட இளைஞருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத கடூழியச் சிறைத்தண்டனை தீர்ப்பை வழங்கி உள்ளார்.
மார்ச் 2020 இல், சந்தேக நபர் கோவிட் -19 உடன் ராஜபக்ஷ குடும்பத்தின் தொடர்பு குறித்து இணையத்தில் பொய்யான கதையை பரப்பியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) முன்வைத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.
விசாரணையின் போது, பிரதிவாதி, இது எனது பதிவு இல்லை என்றும் 14,239 நபர்களிடையே பகிரப்பட்ட ஒரு பதிவு என்றும் கூறினார்.
ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத கடூழியச் சிறைத்தண்டனையானது, தவறான தகவல்களைப் பரப்புவதால், குறிப்பாக நெருக்கடி காலங்களில், தனிநபர்கள் எதிர்கொள்ளும் சட்டரீதியான விளைவுகளுக்கு ஒரு பாடமாகும் என ஒரு மூத்த வழக்கறிஞர் கூறினார்.