உள்நாட்டு செய்தி
விசேட வைத்தியர்களின் சேவைக்காலம் நீடிப்பு……!
அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை வைத்தியர்களின் சேவைக்காலத்தை 65 வயது வரை நீடிப்பதற்கான அனுமதி வழங்குதல் குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாட்டின் சுகாதார சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை குறைக்கும் முயற்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
புதிய ஒப்பந்தம்பொதுத்துறை ஊழியர்களின் ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு வயது 60 ஆகும். இருப்பினும் புதிய பிரேரணையின்படி நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு 65 ஆண்டுகள் வரை மருத்துவர்கள் சேவையில் இருக்க புதிய ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில் சுகாதார சேவை வீழ்ச்சியடைவதை தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என அவர் மேலும் சுட்டிகாட்டியுள்ளார்.