உள்நாட்டு செய்தி
அப்பிள் Phone இனை கொள்வனவு செய்வது போன்று நடித்து,அதனை அபகரித்துச் சென்ற யுவதி சி.ஐ.டி.யால் கைது..!
அப்பிள் ரக கையடக்கத் தொலைபேசியை கொள்வனவு செய்வதாக வந்த யுவதி ஒருவர் அதனை செயற்படுத்தி பார்ப்பது போல் பாசாங்கு செய்து, அதனுடன் தப்பிச் சென்ற நிலையில் கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைதானவர் உடுகம்பளை பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய யுவதி ஒருவராவார்.இவர் வெளிநாடு செல்லும் நபர்களுக்கு விழிப்புணர்வு விரிவுரைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.பேஸ்புக்கில் வெளியான விளம்பரத்தின் அடிப்படையிலேயே குறித்த தொலைபேசியை கொள்வனவு செய்பவர் போன்று இவர் வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.குறித்த தொலைபேசியானது சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபா பெறுமதியானது எனவும் அதனை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.