உள்நாட்டு செய்தி
கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 5% அதிகரிப்பு
எரிபொருள் விலை திருத்தத்தை அடுத்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 5 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.நேற்று நள்ளிரவு முதல் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர் சம்மேளனத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.சமீபத்திய மாதங்களில் பல சந்தர்ப்பங்களில் ஒட்டோ டீசல் மற்றும் பிற எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால், அவர்களின் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.எனவே இறக்குமதி மற்றும் ஏற்றுமதி துறைகளில் உள்ளவர்களுக்கு அறிவித்த பின்னர், கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.டீசலுக்கு செலவிடப்பதும் நிதியை திரும்ப பெறாமல், பணிகளை தொடர முடியாது.விலை திருத்தம் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.