உள்நாட்டு செய்தி
நலன்புரி கொடுப்பனவுகள் வௌ்ளிக்கிழமை முதல்..!
ஜூலை மாதத்திற்கான சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் வயோதிபர்களின், கொடுப்பனவுகளுக்கான 2,684 மில்லியன் ரூபா நிதி அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் திறைசேரியால் வழங்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் இதனை பதிவிட்டுள்ளார்.
இதன்படி முதியோர் கொடுப்பனவை தபால் நிலையங்களிலும் விசேட தேவையுடையோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகளை, பிரதேச செயலகங்களில் இருந்தும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் பெற்றுக்கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.