உள்நாட்டு செய்தி
3 நாட்களுக்கு கொழும்பில் பல வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்
பெல்லன்வில ரஜமகா விகாரையில் வருடாந்த பெரஹரா நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுவது தொடர்பில் பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளனர்.
பெல்லன்வில விகாரையில் இருந்து நேற்று இரவு 7.00 மணிக்கு ஊர்வலம் ஆரம்பமாகி எதிர்வரும் 20 ஆம் திகதி வரை பயணிக்கவுள்ளது.இதன்படி இன்று முதல் 20ம் திகதி வரை பின்வரும் வீதிகள் மூடப்படவுள்ளதால் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.இன்று (17ம் திகதி) இரவு 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பெரஹரா ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி, பாதை இலக்கம் 119 மஹரகம – தெஹிவளை பஸ் வீதியில் தெஹிவளை நோக்கி சுமார் 50 மீற்றர் தூரம் பயணித்து ஆலயம் திரும்பும்.
அவ்வேளையில் பொரலஸ்கமுவ நகரம் மற்றும் பெல்லந்தோட்டை சந்தியிலிருந்து மேற்படி வீதி மூடப்படும்.மாற்று வழி –மஹரகம, பிலியந்தலை கொழும்பில் இருந்து 119 பாதையில் தெஹிவளை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் பபிலியான சந்தியில் இடப்புறம் திரும்பி கீல்ஸ் சந்தி ஊடாக தெஹிவளை நோக்கி செல்ல முடியும்.பொரலஸ்கமுவ மற்றும் காலிவீதியை இணைக்கும் வெரஹெர சந்தியிலிருந்து கங்காராம வீதியூடாக கொலுமடம சந்திக்கு பயணிக்கலாம்.