உள்நாட்டு செய்தி
54 வயது குடும்பஸ்தர் தாக்குதலுக்கு உள்ளாகி மரணம்…!
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.குறித்த நபருக்கும் 19 வயது யுவதி ஒருவருக்குமிடையே காதல் மலர்ந்த நிலையில் அவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு சென்றிருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறிய உறவினர்கள், அவர்களை ஊருக்கு வருமாறு கூறினர்.இந்நிலையில் அவர்கள் இருவரும் நேற்றைய தினம் (07) ஊருக்கு வந்தவேளை மக்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான நபரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சுன்னாகம் பொலிஸார் அனுப்பி வைத்தவேளை, அவரது உயிர் இடைவழியில் பிரிந்தது.இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.