உள்நாட்டு செய்தி
வாகன இறக்குமதி குறித்து உறுதியான நிலைப்பாடுகள் இல்லை
வாகனங்களை மீண்டும் எப்போது இறக்குமதி செய்ய முடியும் என்பது குறித்து தற்போதைக்கு உறுதியான அறிவிப்பை வெளியிட முடியாது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது அவசியமானால் அதற்கான கொள்கைத் திட்டத்தை தயாரிக்க வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் சம்பத் மெரெஞ்சி தெரிவித்திருந்தார்.
வாகன இறக்குமதியின் போது நாட்டுக்கு பொருத்தமற்ற வாகனங்களை இறக்குமதி செய்ததன் மூலம் பெருமளவிலான வெளிநாட்டு பணம் நாட்டை விட்டு வெளியேறியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இனி வரும் காலங்களில் தவறை சரி செய்ய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.