உள்நாட்டு செய்தி
ஆவணங்களின் பிரதி அழிப்பு : சட்டத்தரணி கைது
கெக்கிறாவ மாவட்ட நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள காணி வழக்கு தொடர்பில் ஆவண காப்பகத்தில் இருந்த ஆவணங்களின் இரண்டு பிரதிகளை கிழித்து அழித்ததாக கூறப்படும் பெண் சட்டத்தரணி ஒருவரை கெக்கிறாவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.கெக்கிறாவ மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலயான சட்டத்தரணி நீதிமன்றப் பதிவேட்டில் காணி வழக்கு தொடர்பான கோப்பிலிருந்து 2 ஆவணங்களைக் கிழித்து, அதனை நீதிமன்றத்திற்குள் அழித்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்தநிலையில் காப்பகத்தில் கடமையாற்றிய நீதிமன்ற அதிகாரிகள் நீதிமன்ற பதிவாளருக்கு அறிவித்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சட்டத்தரணி, இன்று கெக்கிறாவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.