உள்நாட்டு செய்தி
அட்டாளைச்சேனை ஆசிரியர் தாக்கப்பட்ட விவகாரம்…!
நேற்று (26) அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி ஆசிரியர் ஒருவர் மாணவர்களால் தாக்கப்பட்டதற்கு எதிராக,
பாடசாலை ஆசிரியர்கள் அனைவரும் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி முன்னால் நீதி கோரி எதிர்ப்பு போராட்டம் தற்போது நடை பெறுகிறது.
அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி இரு மாணவர்கள் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.
ஆசிரியர் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர் மீது அதே கல்லூரியில் உயர் தரம் கற்றும் இரு மாணவர்கள், ஒரு மாணவரின் சகோதரர் மற்றும் மற்ற மாணவனின் பெற்றோர் ஆகியோரால்,
பாடசாலை முடிவடைந்த நேரத்தில் சரமாரியாக தாக்குதல் நடாத்தப்பட்டதில் ஆசிரியரின் கண்ணில் காயம் ஏற்பட்டு,
அவர் தற்போது அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த ஆசிரியரின் மணிக்கணனி மோட்டார் வண்டி மூக்குக்கண்ணாடி என்பன சேதமடைந்துள்ளது.
பாடசாலையின் ஒழுக்க கோவையை செயல்படுத்துவதில் எற்பட்ட முரண்பாட்டில் இத்தாக்குல் நடை பெற்றதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் தெரிவித்தார்.